சென்னை, ஜன. 13–
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.58,720 ஆக விற்பனையாகி வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
சவரனுக்கு ரூ.200 உயர்வு
அந்த அடிப்படையில் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.25 ஆகவும், 22 கேரட் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,340 ஆக விற்பனையாகி வரும் நிலையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.58,720 விலையில் விற்பனையாகி வருகிறது.
அதேபோல், இன்றைய வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.102 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.1,02,000 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.