செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னை, ஏப். 05–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ. 52,080-க்கு விற்பனையாகிறது.

பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், நேற்று மீண்டும் புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ.6,545-க்கும், பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையானது.

சவரனுக்கு ரூ.280 குறைவு

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.85-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 குறைந்து ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *