செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு

Makkal Kural Official

சென்னை, ஜூன் 10–

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது 3 வது நாளாக தொடர்ந்து சரிந்து வருவது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை ரூ74 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. ஆனால் மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டது.

இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று (09.06.25) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,955-க்கும், ஒரு சவரன் ரூ.71,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சவரனுக்கு ரூ.80 குறைவு

இந்த நிலையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *