செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு

Makkal Kural Official

சென்னை, ஜூன் 5–

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40 க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. மே மாத தொடக்கத்தில் சற்று குறைந்த தங்கம் விலை, தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

சவரனுக்கு ரூ.320 உயர்வு

இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72ஆயிரத்து 720-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *