செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு

Makkal Kural Official

சென்னை, மே 26–

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து சவரன் ரூ.71 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. மே மாத தொடக்கத்தில் விலை திடீரென குறைந்தது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

சரனுக்கு ரூ. 320 குறைவு

இதனிடையே, கடந்த 24-ம் தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8ஆயிரத்து 950-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *