செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.920 சரிவு

Makkal Kural Official

சென்னை, மே 9–

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 920 குறைந்து, ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த மாதம் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. மே மாதத்தில் விலை குறைந்து வந்தது.

சவரனுக்கு ரூ.920 குறைவு

இதனிடையே, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55-க்கும், சவரனுக்கு ரூ.440-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு 115 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும் சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *