சென்னை, மே 6–
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்து சவரன் ரூ.72,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்து வருகின்றனர். ஏப்ரல் மாத கடைசியில் அட்சய திருதியை நாள் கொண்டாட்டப்பட்டதால் அதுவரை உச்சத்தில் இருந்த தங்கம் விலை, அதற்கு அடுத்த நாட்களில் சற்று குறையத் தொடங்கி,ரூ.3000 ரூபாய்க்கு மேல் குறைந்தது.
சவரனுக்கு ரூ. 1000 உயர்வு
ஆனால் 4 நாட்களுக்கு பிறகு இறங்கிய வேகத்திலேயே தங்கம் விலை எகிற தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று (மே 5) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775 க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (மே 6) தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025 க்கும் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி .111 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.