சென்னை, அக். 23–
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.58,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அண்மை காலமாக தங்கம் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.58,72 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,340 க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.112 க்கும், ஒரு கிலோ ரூ.1,12,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ரூ.9,000 அதிகரித்து வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.