செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்வு

Makkal Kural Official

ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, அக். 18–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ 58 ஆயிரத்தை நெருங்கியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு, உயர்ந்து கொண்டே இருக்கிறது. உக்ரைன்–ரஷ்யா போர், பாலஸ்தீனம், லெபனான், ஈரான் என பல நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் என பல்வேறு காரணங்கள், இந்த விலையேற்றத்துக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது

இந்த நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரத்தை 3 நாட்களுக்கு முன்னர் கடந்த நிலையில், தற்போது ரூ.58 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7240 க்கு விற்பனையாகிறது. அதபோல், தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.57,920 க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப்போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ. 2 உயர்ந்து ரூ. 105 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கட்டி வெள்ளி ரூ.1,05,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *