சென்னை, செப். 7–
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 53,440-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் மீதான வரியை குறைத்ததால், தங்கத்தின் விலை கிடுகிடு சரிவ ஏற்பட்ட நிலையில், சில நாட்களில் மீண்டும் விலை பழைய நிலையை அடைந்தது. அதன் பிறகு ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று திடீரென பவுனுக்கு ரூ. 408 உயா்ந்து ரூ.53,760-க்கு விற்பனையானது.
சவரனுக்கு ரூ.320 குறைவு
இந்த நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 6,680-க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.53,440 க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.92-க்கும் கிலோ ரூ.90,000 க்கும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.89.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,500 குறைந்து ரூ. 89,500-க்கும் விற்பனையாகிறது.