செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைவு

Makkal Kural Official

சென்னை, ஏப். 28–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.520 குறைந்து சவரன் ரூ.71,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விலை அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

சவரனுக்கு ரூ.520 குறைவு

இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.9,005 க்கும், சவரன் ரூ.72,040 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, தங்கம் விலை இன்று ஏறுமா அல்லது குறையுமா? என்ற எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.8,940 க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொருத்த அளவில் கிராமுக்கு ரூ.111 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,11,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *