செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு

Makkal Kural Official

புதிய உச்சமாக பவுன் ரூ.72,120 க்கு விற்பனை

சென்னை, ஏப். 21–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.70 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து ரூ.71 ஆயிரத்தை தொட்டது.

சவரனுக்கு ரூ.560 உயர்வு

அந்த வகையில், தங்கம் விலை கடந்த 18 ந்தேதி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து, தங்கம் விலை நேற்று முன்தினம் (ஏப்.19) விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,945-க்கும், சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,015-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.111க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,11,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *