சென்னை, ஜூலை 6–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து, ரூ.54,560 க்கு விற்பனையாகிறது.
கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.6,760க்கும், ஒரு சவரன் 54, 080 ரூபாய்க்கும் விற்பனையானது.
சவரனுக்கு ரூ.480 உயர்வு
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,820 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,560க்கு விற்பனையாகிறது.அதேபோல், வெள்ளியின் விலையும் திடீர் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.97.70 க்கு விற்ற நிலையில் இன்று கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து கிராம் ரூ.99.30 க்கும் கட்டி வெள்ளி விலை கிலோ ரூ.99,300 க்கும் விற்பனையாகிறது.