சென்னை, நவ. 25–
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ.57,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையானது , தற்போதைய காலகட்டத்தில் மக்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
சவரனுக்கு ரூ.800 குறைவு
நேற்றைய தினம் ரூ.58400 க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, இன்றைய தினம் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 7,200 ஆகக் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 57,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,01,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்றும் அப்படியே தொடர்வது குறிப்பிடத்தக்கது.