செய்திகள் வர்த்தகம்

தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு

சென்னை, மார்ச் 25–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.38,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக சற்று குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.37 உயர்ந்து, ரூ.4,831-க்கு விற்பனையானது.

சவரனுக்கு ரூ.248 உயர்வு

இந்நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,832 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 அதிகரித்து, ரூ.4,854-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.73.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.73,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.