செய்திகள்

தங்கத்தின் மீதே பினராயிக்கு கண்: கம்யூனிஸ்டு மீது பிரியங்கா தாக்கு

திருவனந்தபுரம், மார்ச் 31–

தங்கத்தின் மீதே பினராயிக்கு கண் என்று கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு கேட்ட பிரியங்கா காந்தி, கம்யூனிஸ்டுகளை தாக்கி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

கேரள மாநிலம் வந்த கிழக்கு உத்திரபிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கருநாகப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில், திரளான மக்கள் மத்தியில் உரையாற்றினார். காங்கிரசுக்கு, கேரள மக்கள் தான் உண்மையான தங்கம். முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டு தங்கத்தின் மீது மோகம் கொண்டிருக்கிறார். வெளிநாட்டு தங்கத்தின் மீதே கண்கள் வைத்திருக்கிறார்.

காங்கிரஸ் வேட்பாளர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இளைஞர்கள். அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். நமது, தேர்தல் அறிக்கையானது கேரள மக்களின் விருப்பங்களையும் நம்பிக்கையையும் மதிப்பீடு செய்து தயாரிக்கப்பட்டது.

கேரளாவில் மூன்று அரசியல் களங்கள் உள்ளன. ஒன்று சிபிஎம்-மின் வன்முறை மற்றும் ஊழல் அரசியல், இரண்டாவதாக மோடியின் மதவாத பிற்போக்கு அரசியல், மூன்றாவது எதிர்காலத்திற்கான தெளிவான பார்வையைக் கொண்ட காங்கிரஸின் அனைத்து மக்களுக்குமான அரசியல் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *