வாழ்வியல்

தக்காளிக்கு சுவையை தரும் ‘டாம்லாக்சி’ என்ற மரபணு!

இன்று கடைகளில் கிடைக்கும் தக்காளிகள், ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டவை. அவை பெட்டிக்குள்ளும், கடையிலும் நெடுநாட்கள் கெடாமல், நிறம் மாறாமல் இருக்கும்படி மரபணுத் திருத்தம் செய்யப்பட்டவை. வர்த்தக ரீதியில் வளர்க்கப்படும் தக்காளி வகைகளில் சதைப் பற்று, புளிப்பும் இனிப்பும் கலந்த ருசி, மணம் போன்றவற்றைத் தரும் ஜீன்கள் அகற்றப்பட்டு விட்டன.

இதனால் தான், அந்தக் காலத்து ருசி மிக்க தக்காளி விதைகளை, ஆர்வலர்கள் பலர் தங்கள் தேவைக்கு வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், அண்மையில், மரபணு ஆராய்ச்சியாளர்களில் சிலர், தக்காளிக்கு சுவை தரும் மரபணுக்கள் எவை என ஆராய்ந்தனர். தனி நபர்கள் வளர்க்கும் தக்காளிகள் முதல், காடுகளில் தானாக வளரும் தக்காளிகள் வரை, 725 வகை தக்காளிகளை அவர்கள் ஆராய்ந்தனர். இதன் விளைவாக தக்காளிக்கு ருசியும், மணமும் தரும் மரபணுக்கள் உட்பட, 4,873 புதிய மரபணுக்களை அவர்கள் அடையாளம் கண்டு உள்ளனர்.

அவற்றில் ‘டாம்லாக்சி’ என்ற மரபணு, கனிந்த ரசமிக்க ருசியையும் மணத்தையும் தருவதை கண்டறிந்துள்ளனர். அடுத்து, இந்த மரபணுக்களை வர்த்தக ரீதியில் பயிரிடப்படும் தக்காளிகளுக்குள் மீண்டும் புகுத்தி பரிசோதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு ‘நேச்சர் ஜெனடிக்ஸ்’ இதழில் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *