மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்குர் தொடங்கி வைத்தார்
புதுடெல்லி, பிப்.23-
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்குர் தொடங்கி வைத்தார்.
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்குர், இந்தியாவில் ஊடகத்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கும் 4 உருமாற்ற இணையதளங்களை நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த முன்முயற்சியானது செய்தித்தாள் வெளியீட்டாளர்கள் மற்றும் டெலிஷன் சேனல்களுக்கு மிகவும் சாதகமான வணிக சூழலை வளர்த்து எளிதாக வணிகம் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது, அரசாங்க தகவல் தொடர்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல், உண்மையான அரசாங்க வீடியோக்களை எளிதாக அணுகுதல் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் விரிவான தரவுத்தளத்தை உருவாக்குதல். எதிர்காலத்தில் கேபிள் டி.வி. துறையில் ஒழுங்குமுறை செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதலில் அரசுக்கு உதவுகிறது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்குர் பேசுகையில், ‘இன்று இந்தியா முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக பார்க்கப்படுவதாகவும், உலக நிறுவனங்கள் இங்கு தொழில்களை தொடங்க ஆர்வமாக உள்ளது.
இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குவதை பெரிதும் மேம்படுத்தி உள்ளது. மேலும் இது ஏற்கனவே உள்ள வணிகங்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர் ஆகியோரிடம் இருந்து முதலீடுகளை அதிகரிக்க வழிவகுத்தது.
ஸ்டார்ட்–அப் சுற்றுச்சூழல் அமைப்பு, குறிப்பாக, ஸ்டார்ட்–அப்கள் மற்றும் யூனிகார்ன்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்புடன் செழித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.