செய்திகள்

டோஷிபா நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ நியமனம்

சென்னை, அக்.6–

டோஷிபா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பதவி ஏற்றார். ஈட்டோ, டோஷிபா சர்வதேச ஆற்றல் சார் தொழிலில், பல்வேறு தொழிற்பிரிவுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டோஷிபா நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்த டோமோஹிக்கோ ஒக்காடாவைத் தொடர்ந்து இப்பதவியை ஏற்றுள்ளார்.

டோஷிபா நிறுவனம் இந்திய அரசின் முன்னெடுப்புகளான மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்களுக்கு குறிப்பாக முக்கிய பங்கினை வழங்கியது. ஈட்டோ பேசுகையில்,‘‘நிலையானவளர்ச்சியை எட்டத்தேவையான நவீன தொழிநுட்பங்கள் மற்றும் தீர்வுகளை இந்தியாவிற்கு வழங்க டோஷிபா நிறுவனம் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும். இந்தியாவிற்கு டோஷிபா நிறுவனம் அளித்துள்ள வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவேன்’’ என்றார்.

டோஷிபா நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் ஆற்றல் சார் உட்கட்டமைப்பு தொழில்துறையில் சர்வதேச செயல்பாடுகள், தொழில் மேம்பாடு, விற்பனை மற்றும் இதர வர்த்தக பணிகள் உள்ளிட்ட பல்வேறு தலைமைப்பதவிகளை ஈட்டோ வகித்துள்ளார். இந்தியாவுடனான அவரது கூட்டணி, அவர் பணியைத் தொடர்ந்த காலத்தில் துவங்கியது. 1991-ஆம் ஆண்டு, தெற்காசிய குழுமத்தின் அயல்நாட்டு ஆற்றல் பிரிவில் அங்கம் வகித்த இவர், உத்திரபிரதேச மாநிலத்தில் அனல்மின் நிலையத் திட்டத்தில் பணியாற்றி, இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஒன்றிற்கு, மின்னாற்றல் பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பினை வகித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *