மாஸ்கோ, நவ. 29–
அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து இருப்பதால், கவனமாக இருக்கும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ், டொனால்ட் டிரம்ப் இடையேயான போட்டியில் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்து உள்ளார்.
அலெர்ட் செய்த புதின்
ஏற்கனவே அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக டொனால்ட் டிரம்ப் உயிர் தப்பினார். மேலும் மற்றொரு தாக்குதலில் இருந்தும் அவர் உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனால் டிரம்ப்பை கவனமாக இருக்கும் படியும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்து உள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.