அறிவியல் அறிவோம்
போதைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தும் ஓப்பியாய்டு மருந்தை செலுத்துவதன் மூலம் உடலில் உள்ள அதிகபட்ச கணையநீரைக் குறைக்க முடியும் என்று மாண்டி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் கணையநீர் சுரப்பு ரத்தத்திலிருந்து குளுக்கோஸை உறிஞ்சுவதற்கு உயிரணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பல்வேறு காரணங்களால் கணையநீர் பயன்படுத்தும் திறனை செல்கள் இழக்கும்போது டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஹைபர் இன்சுலினீமியா எனப்படும் நிலையை அடையும்போது, அதிகப்படியான கணையநீர் ரத்த ஓட்டத்தில் பயணிக்கிறது.
கணையநீர் எதிர்ப்பு மற்றும் ஹைபர் இன்சுலினீமியா இடையேயான உறவு சுழற்சியானது. ஒவ்வொன்றும் மற்றொன்றின் நிகழ்வை அதிகரிக்கிறது. இது குறித்து ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் மோண்டல் கூறும்போது, “உலகத்தின் நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா உள்ளது. கணையநீர் எதிர்ப்புக்கான காரணங்களில் ஒன்று வீக்கம் என்பதை நாங்கள் அறிவோம். ஹைப்பர் இன்சுலீனீமியா உடலில் எப்படி அழற்சியைத் தூண்டுகிறது என்பதை நாங்கள் அறிய விரும்பினோம்.
அதன்படி புரத மூலக்கூறான எஸ்ஐஆர்டி 1 ஐ நாங்கள் கண்டுபிடித்தோம். இது ஹைப்பர் இன்சுலினீமியாவில் ஒடுக்கப்படுகிறது. எஸ்ஐஆர்டி 1 -ன் குறைவு எஎஃப்கேபி எனப்படும் மற்றொரு புரதத்தைச் செயல்படுத்துகிறது என்பதையும் வீக்கத்தைத் தூண்டுவதையும் கண்டுபிடித்தோம்.
குணப்படுத்துதல் மற்றும் மேலாண்மை உத்திகளைக் கண்டறிவதற்கு நீரிழிவு நோய்க்கான பல்வேறு காரணிகளைப் புரிந்துகொள்வது முக்கியம் ” என்றார்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு, இந்தியாவில் நீரிழிவு நோயைப் புரிந்துகொண்டு தீர்வு காண வேண்டிய அவசரத் தேவையைச் சரியான நேரத்தில் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.