வாஷிங்டன், நவ.9–
டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார்.
டெஸ்லா பங்குகள் மூலம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும்பகுதிக்கு பணத்தை திரட்ட எலான் மஸ்க், சுமார் 3.95 பில்லியன் டாலன் மதிப்புள்ள 19.5 மில்லியன் பங்குகளை விற்றதாக அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைய ஆவணங்கள் காட்டுகின்றன.
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் மின்சார கார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டரை வாங்கிய அவர் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 395 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை அவர் விற்றார்
எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா இன்க் நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்தது.