செய்திகள்

டெஸ்ட் போட்டியிலிருந்து அஸ்வின் திடீரென விலகல்

புதுடெல்லி, பிப்.17–

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் திடீரென விலகி உள்ளார். இரண்டாவது நாளான நேற்று 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதின் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணி மீதமுள்ள ஆட்டத்தை 10 வீரர்களுடனே தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐசிசி விதியின்படி, வழக்கமாக வீரர் காயமடைந்தாலோ அல்லது கொரோனா பாதிப்பு இருந்தால் தான் பதில் வீரர்கள் அனுமதிக்கப்படுவர்.

அல்லது எதிரணியின் கேப்டன் சம்மதித்தால் மட்டுமே அஸ்வினைப் போல ஒரு ஆல் ரவுண்டரை அணியில் சேர்க்கலாம். அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்கலாம்.

அப்படி இல்லாதபோது ஃபீல்டிங் மட்டுமே செய்ய ஒரு வீரரை சேர்க்கலாம்.

இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக ஃபீல்டிங் மட்டுமே செய்ய தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *