டெல்லி, பிப். 21–
வயிறு சம்பந்தமான உடல் உபாதையால், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து இன்று காலையில் வீடு திரும்பினார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவரான, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு வயிறு சம்பந்தமான உடல் உபாதை ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று மாலையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.
வீடு திரும்பிய சோனியா
இந்நிலையில், தீவிர உடல் பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள், சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்நிலையில், இன்று காலையில் சோனியா காந்தி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.