டெல்லி, நவ. 3–
டெல்லி மருத்துவமனைகளில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
காற்று மாசுபாடு உச்சத்தில் இருப்பதால், டெல்லி மக்கள் பல வித நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் பலர் சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்படுவதாக தெரிவிக்கிறது. மேலும் காற்று மாசுபாட்டால் டெல்லி மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு (ICU) வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பள்ளிகளை மூட வாய்ப்பு
இந்த காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணம், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் தான் என்கின்றனர். மேலும் அண்மை ஆய்வறிக்கைபடி, காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடத்தில் இருந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்ச,ர் டெல்லியில் காற்றின் தர குறியீடு 450ஐ தாண்டும் போது, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்படும். இக்காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு காற்று மாசுபாட்டால் பள்ளிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.