செய்திகள்

டெல்லி, பெங்களூருவில் 85 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 18–

பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கும், புதுடெல்லியில் 45 பள்ளிகளுக்கும் (மொத்தம் 85 பள்ளிகள்) மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களாக புதுடெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இன்று 45 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் எழுதுகிறேன். வெடிபொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் அனைவரையும் இந்த உலகத்திலிருந்து அழித்துவிடுவேன். ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது. பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து அவர்களின் குழந்தைகளுடைய உடல்களை கண்ணீர்விட்டு, எடுத்துச்செல்லும் செய்திகளைப் பார்த்து நான் மகிழ்ச்சியுடன் சிரிப்பேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் லைன்ஸில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ், பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி மற்றும் ரோஹினியில் உள்ள தி சவரன் பள்ளி உட்பட மொத்தம் 45 பள்ளிகளுக்கு இதேபோல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

சோதனை; புரளி

சம்பந்தபட்ட பள்ளிகளில் போலீசார் சோதனை நடத்தினர். பின்னர், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய இ மெயில் முகவரியை கைப்பற்றிய போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பெங்களூருவில் 40 பள்ளிகள்

அதேபோல், பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை அடுத்து பள்ளிகளில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று கண்டறியும் முயற்சியும் நடந்திருக்கிறது.

இந்த வார தொடக்கத்தில் திங்கள் முதல் புதன் கிழமை வரை டெல்லியில் உள்ள 10 பள்ளிகள் மற்றும் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு இதே போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதில், அந்த மிரட்டல்கள் புரளி என்பது தெரியவந்தது. டெல்லியில் பள்ளிகளுக்கு விடுக்கப்படும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *