வாழ்வியல்

டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான தனி ஆராய்ச்சி பிரிவு தொடக்கம்!

இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி . கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் நடந்த காற்று மாசுபாடு மக்களை மிகவும் பாதித்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்கமே விடுமுறை அளிக்கும் வகையில் காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்தது.

இந்த சூழலை மாற்றியமைக்கும் விதமாக டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான தனிப்பிரிவு ஒன்றை தொடக்கியுள்ளார்கள். மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இன்று சுவாசிக்கும் காற்று கூட தூய்மையாக இல்லாமல் போயிற்று.

அந்த அளவுக்கு வாகன பயன்பாடு, தொழிற்சாலை பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு மிக அதிகம்.

இந்நிலையில் ஐஐடியின் டெல்லி கிளை காற்று மாசுக்கு எதிரான தனி ஆராய்ச்சி பிரிவை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. இது CERCA எனப்படும் சென்டர் ஆப் எக்சலன்ஸ் பார் ரிசர்ச் ஆன் கிளீன் ஏர் என்ற இந்த பிரிவு காற்று மாசுபாடு குறித்த திட்டங்கள், தீர்வுகள் பற்றி ஆராய உள்ளது.

மேலும் அரசு , தனியார் தொழிற்சாலைகளின் நிதி உதவியுடன் வரும் காலங்களில் இதற்கான கருத்தரங்குகளை தொடர உள்ளது.நம் கடமை இப்போதே காற்று மாசுபாடுகளை குறைக்கும் நடவடிக்கைகளை செய்ய முன்வரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *