போஸ்டர் செய்தி

டெல்லியில் வழங்கிய தேசிய விருதுகளை எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

சென்னை, செப். 14–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று (14–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்தித்து டெல்லியில் வழங்கப்பட்ட தேசிய விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மத்திய அரசின் சார்பில் கடந்த 11.9.2018 அன்று புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட தேசிய அளவிலான 3 மாநில விருதுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அளவிலான 2 மாவட்ட விருதுகள், கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ் 7 முக்கிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பபட்ட தேசிய அளவிலான மாவட்ட விருது, ஆகிய விருதுகளை காண்பித்து முதல்வரிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.

மத்திய அரசால், புதுடில்லி வித்யான் பவனில் 11.9.2018 அன்று நடத்தப்பட்ட தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டில் 2017–18ம் நிதியாண்டில் குறித்த காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஊதியத்திற்கு இழப்பீடு வழங்குவதில் சிறந்த செயல்பாடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உருவாக்கப்படும் சொத்துக்களுக்கு புவிக்குறியிடுதலில் சிறந்த முயற்சிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து ஊதியம் செலுத்துதலில் சிறந்த செயல்பாடு ஆகியவற்றிற்காக தேசிய அளவிலான 3 மாநில விருதுகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு தேசிய அளவிலான 2 மாவட்ட விருதுகளும் மற்றும் கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ், குறிப்பிட்ட 7 முக்கியத் திட்டங்களை தன்னிறைவுடன் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேசிய அளவிலான மாவட்ட விருதும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமரால் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்.

முதல் முறை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் 3 மாநில விருதுகள் ஒரே ஆண்டில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கா.பாஸ்கரன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, முன்னாள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரும், தற்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரஷாந்த் மு.வடநேரே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கூடுதல் இயக்குநர் க.முத்துமீனாள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *