புதுடெல்லி, ஜூலை 11–-
தமிழக நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் தங்கியுள்ள அவர் நேற்று மாலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு அரசின் நிதி தேவைகள் பற்றி பேசப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லி விஞ்ஞான பவனில் இன்று (11–ந் தேதி) நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்கிறார்.