செய்திகள்

டெல்லியில் நாளை 51வது ஆளுநர்கள் மாநாடு: மோடி, அமித்ஷா பங்கேற்பு

டெல்லி, நவ. 10–

டெல்லியில் நாளை ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரும் பங்கேற்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஆவது மாநாடு நடந்தது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு இந்த மாநாடு நடத்தப்படவில்லை. தற்போது தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

51 வது மாநாடு

அந்த வகையில் கவர்னர்கள், துணைநிலை கவர்னர்களுக்கான 51 ஆவது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் 11ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் நான்காவது மாநாடு இது.

இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். கொரோனா பரவல் மற்றும் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *