செய்திகள்

டெல்லியில் காற்று மாசு குறைந்ததால் நாளைமுதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு

டெல்லி, நவ. 19–

டெல்லியில் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும், காற்று மாசு குறைந்ததால், நாளை முதல் திறக்கப்படுகிறது.

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாட்களிலேயே காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது. இதனால் டெல்லியில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளிகள் நாளை திறப்பு

இந்நிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது. கடந்த 17 ஆம் தேதி காற்று மாசு 405 ஆக இருந்த நிலையில் நேற்று 319 ஆக குறைந்துள்ளதால் நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இதுபோல் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து இருந்த நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் டெல்லியில் செல்வதற்கு தேசிய காற்று தர மேலாண்மை தடை விதித்திருந்தது. தற்போது காற்று மாசு குறைந்துள்ளதால் வாகனங்கள் நுழையவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *