செய்திகள்

டெல்லியில் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2,898 கோடி

புதுடெல்லி, மே 13–

டெல்லியில் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவாக ரூ.2,898 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டது.

அந்த சூழலில் இருந்து மெல்ல மீண்டு வருவதற்குள் 3வது கொரோனா அலைகள் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்று விட்டது.

இந்நிலையில், கடந்த 2020–-21ம் நிதி ஆண்டின் ஏப்ரலில் டெல்லியில் ரூ.320 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது. இது 2021-–22ம் ஆண்டு ஏப்ரலில் ரூ.2,325 ஆக இருந்தது.

ஆனால், நடப்பு 2022-–23ம் நிதி ஆண்டில் இந்த அளவு கூடியுள்ளது. டெல்லியில் ஏப்ரலில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவாக ரூ.2,898 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதனால், பொருளாதார மீட்சி நிலை டெல்லியில் விரைவாக நடந்து வருகிறது என்பதற்கான அடையாளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.