செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு : சுவாசகோளாறு, ஆஸ்துமா பிரச்சினை

Makkal Kural Official

டெல்லி, நவ. 6

காற்றின் தரம் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் சுவாசகோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து உள்ளது.

இந்தியாவிலேயே தலைநகர் டெல்லியில் அக்டோபர் மாதத்தில் காற்று மாசுபாடு மிக மோசமாக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் மக்கள் ஆஸ்துமா, சுவாசப்பிரச்சனை, தலைவலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்லியில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு நுறையீரல் தொடர்பான நோய், ஆஸ்துமா ஆகியறவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்ட பல காரணங்களால் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் வேளாண் கழிவுகளை எரித்தல் மூலம் 10 சதவிகிதம் மட்டுமே மாசுபட்டதாக டெல்லியின் காற்றின் தர மேலாண்மை அமைப்பு தெரிவிக்கிறது.

காற்றின் தரக் குறியீடு

கடந்த 2 நாட்களாக, திங்கட்கிழமை காலை 9 மணிக்கு 373 ஆகவும், செவ்வாய்கிழமை 384 ஆகவும், டெல்லியின் காற்றின் தரக் குறியீடு “மிகவும் மோசமான” வரம்பில் அதிக அளவில் பதிவாகியது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியில் இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு (AQI) 358 ஆகப் பதிவாகியுள்ளது.

அலிபூர் AQI 372, பவானாவில் 412, துவாரகா செக்டார் 8 இல் 355, முண்ட்கா 419, நஜப்கர் 354, நியூ மோதி பாக் 381, ரோஹினி 401, பஞ்சாபி பாக் 388 மற்றும் ஆர்.கே. புரம் 373 CP இந்தப் பகுதிகள் அனைத்தும் மிகவும் மோசமான காற்றின் தர அளவைப் பதிவு செய்து உள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது தலைநகரில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை எப்படி மீறப்பட்டது என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு இதுபோன்று நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி அரசுக்கும், டெல்லி போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *