வர்த்தகம்

டெமனாஸ் சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டசத்து உணவு

சென்னை, ஜூலை.1–

உலகின் முன்னணி வங்கி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாகிய டெமனாஸ், தன்னார்வ தொண்டு நிறுவனமான அட்சயபாத்திராவுடன் இணைந்து சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், ஊட்டசத்து உணவுபொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியது.

சென்னையில் உள்ள 4 அரசு பள்ளிகளை சேர்ந்த 730 மாணவர்களுக்கும், 720 மாணவியர்க்கும் சேர்த்து மொத்தம் 1450 தொகுப்புகள் வழங்கப்ட்டன. இந்த தொகுப்பு ஒவ்வொன்றும் ரூ.550 மதிப்புடையவை. இந்த தொகுப்புகளில் சர்க்கரை, சமையல் எண்ணை, ராகி, கடலை, சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள் போன்ற ஊட்டசத்து மிகுந்த உணவு பொருட்களும், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற கல்வி பொருட்களும், சோப், டூத்பேஸ்ட், டூத்பிரஷ் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற சுகாதார பொருட்கள் உள்ளன.

இந்த நிகழ்ச்சி புதுப்பேட்டையிலுள்ள ஆர்.பி.ஏ.என்சி பள்ளியிலும், தி.நகரில் உள்ள எம்.என்.சி உயர்நிலை பள்ளியிலும் நடைபெற்றது.

இது குறித்து டெமனாஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் மூத்த துணைத் தலைவர் பிஜுமோன் ஜேக்கப், கூறுகையில்,2016ம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஆரம்பத்தில், கல்வி நிறுவனங்களை மேம்படுத்த டிஜிட்டல் வசதி வழங்கினோம் என்றார்.

நாடு கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவுக்கான அணுகல் சிரமங்களை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக எங்களுடன் இணைந்து செயலாற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புசக்தியையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்கள் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பயனுள்ள திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *