அறிவியல் அறிவோம்
டெபிட் – கிரெடிட் கார்டு இல்லாமலேயே ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் முறை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறார் மங்களூருவில் வசிக்கும் சுஹைல் என்ற இளைஞர் .
“டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளின் விவரங்களைத் தெரிவிக்காமலே ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும் ஒரு முறையை கண்டுபிடிக்க முயன்று வருகிறேன். ‘பின் நம்பர்’ மற்றும் கிரெடிட்/ டெபிட் கார்டின் விவரங்களைப் பாதுகாத்தல், ஒன் டைம் கடவுச்சொல் திருட்டு மற்றும் அட்டை ஹேக்கிங் ஆகியவற்றைத் தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். விரைவில் அதைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்,” என்று கூறினார் சுஹைல்.
சுஹைல் பாடல், எழுதுதல், கராத்தே, யோகா,சதுரங்கம், போன்றவற்றில் ஆர்வம் காட்டியுள்ளார்.
சுஹைலின் குடும்பம் மங்களூருவில் குடியேறி பிறகு, அவருக்கு படிக்கும் யாவற்றையும் பிராக்டிலாக செய்து பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவாக ஒரு விஷயத்தை பற்றி முழுமையாய் அறிந்து கொள்ளும் வரை அது குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்துள்ளார்.
மகனின் ஆர்வத்தை அறிந்த அவரது பெற்றோர் சுஹைலுக்கு இணைய இணைப்புடன் ஒரு மடிக்கணினியை வாங்கிக் கொடுத்துள்ளனர். இப்போது அவருக்குத் தெரிந்த பெரும்பாலான விஷயங்களை இணையமே அவருக்குக் கற்பித்ததாக கூறுகிறார்.