அறிவியல் அறிவோம்
டெங்கு காய்ச்சல் மிதமாக இருக்கும் ஒருவர் 2 அல்லது 3 வாரங்களில் குணமாகிவிடுவார். சரியான மருந்துகளோடு உணவுப்பழக்கத்தில் சில மாற்றங்கள் செய்தால் விரைவாக குணமாகலாம்.
ஏடிஸ் எஜிப்தி என்ற கொசு கடிப்பதன் மூலமாக மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே இந்த கொசுக்களை பார்க்க முடியும். டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவருக்கு மிதமான முதல் தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி, கை கால் மூட்டுகளில் வலி, கண்களின் பின்புறம் வலி, ரத்தக்கசிவு போன்றவை ஏற்படும்.
சில சமயங்களில் தொற்றுகள் தீவிரமாகி மருத்துவ மணையில் தங்கி சிகிச்சை எடுக்கும் நிலைக்கு கூட தள்ளப்படுவிர்கள்.
டெங்குவிலிருந்து குணமாகும் ஒருவர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவு மட்டுமின்றி நீர்சத்தும் மிகவும் அவசியம். ஆகவே, டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக மீள்வதற்கு உதவும் சில பானங்களைப் பற்றி பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவு மட்டுமின்றி நீர்சத்தும் மிகவும் அவசியம். ஆகவே டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக மீள்வதற்கு உதவும் சில பானங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
இளநீரில் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்ஸ் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இளநீர் குடிப்பதால் உங்கள் வயிறுக்கு இதமளிப்பதோடு குமட்டல், வாந்தி வருவதையும் தடுக்கும்.
மஞ்சள் தூள் கலந்த பால்: மஞ்சளில் அழற்சி எதிர்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் கொண்ட குர்குமின் உள்ளது. சூடான பாலில் மஞ்சளை கலந்து குடிப்பதால் வீக்கங்கள் குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் பலமாகும்.
பழ ஜூஸ்: பிரெஷான பழங்களில் பிழியபட்ட ஜூஸை குடிப்பதால் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி போன்ற பழங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
கற்றாழை ஜூஸ்: அழற்சி எதிர்ப்பு மற்றும் இதமளிக்கும் பண்புகள் கற்றாழையில் நிறையவே உள்ளது. காலையில் தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், செரிமனப் பிரச்சனைகள் சரியாகும்.டெங்கு காய்சல் என்பது தீவிரமான நோயாகும். சரியான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டால் சீக்கிரமாகவே இந்நோயிலிருந்து குணமடையலாம்.