வாழ்வியல்

டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும் குணப்படுத்த தமிழக அரசு செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான பிரத்தியேக சிகிச்சை மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகளும், காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்குப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொதுச் சுகாதார சட்டம், 1939 பிரிவுகள் 83 மற்றும் 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, உரிமையாளர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

டெங்கு தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு என்ன?

“வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கிடக்கும் பயன்படுத்தாத பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.

தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்கவேண்டும். கொசு வலை போன்ற கொசுத்தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *