செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தில் வேலை நேரம் அதிகரிப்பு: நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ராஜினாமா

சான்பிரான்சிஸ்கோ, நவ.18–

எலான் மஸ்க்கின் எச்சரிக்கையை அடுத்து, நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.

டுவிட்டர் அதிக லாபத்தை உருவாக்கத் தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறிய மஸ்க், வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், டுவிட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் கடந்த புதன்கிழமை இரவு மின்னஞ்சல் அனுப்பினார். எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், டுவிட்டர் வெற்றிபெற நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு தயாராக இருங்கள் அல்லது மூன்று மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யலாம் என்று அனைத்து ஊழியர்களிடமும் கூறியியுள்ள

எலான் மஸ்க்கின் எச்சரிக்கையை அடுத்து, நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

டுவிட்டர் நிறுவனத்தில் சர்வதேச அளவில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *