செய்திகள்

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் 4 அணிகள் தேர்வு

சூப்பர் 12 ஆட்டங்கள் இன்று தொடக்கம்

துபாய், அக். 23–

ஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதி சுற்று போட்டிகளில் 4 அணிகள் தேர்வான நிலையில் இன்று முதல் சூப்பர் 12 ஆட்டங்கள் தொடங்குகிறது.

டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. தகுதி சுற்றுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாட தகுதி பெறும். அந்த வகையில் ஸ்காட்லாந்து, வங்கதேசம், இலங்கை மற்றும் நமீபியா ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் நமீபியா அணி, முதன்முறையாக டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

சூப்பர் 12 தாெடக்கம்

இந்த நிலையில் இன்று முதல் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் தொடங்குகின்றன. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன.

நாளை மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் இலங்கை அணியும் வங்கதேச அணியும் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நவம்பர் 14 வரை நடைபெறும் இந்தப் போட்டிகளைக் காண 70 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *