செய்திகள்

டி.வி.எஸ். குரூப் சுந்தரம் ஹோண்டா 1 லட்சம் கார்களை விற்று சாதனை

சென்னை, மே. 17–
சுந்தரம் ஹோண்டாவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் சரத் விஜயராகவன் கூறியதாவது:–
ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் முன்னணி முகவராக சுந்தரம் ஹோண்டா செயல்பட்டு வருகிறது. முதலாவது கார் 1998-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 14 ஆண்டுகள் 4 மாதங்களுக்குப் பிறகு 40,000 -கார் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, 6 ஆண்டுகள் 11 மாதங்கள் கழித்து ஹோண்டா கார் விற்பனை 1 லட்சம் என்ற மைல்கல்லை தற்போது எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மூலம் சாத்தியமாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதன் மூலம் 2018–-19 நிதியாண்டில் 13 தேசிய விருதுகளை நிறுவனம் பெற்றுள்ளது.
சுந்தரம் ஹோண்டாவின் விற்று முதல் ரூ.840 கோடியாகவும், பணியாளர்களின் எண்ணிக்கை 1,400-ஆகவும் உள்ளது.
மேலும் 50 ஆயிரம் சதுர அடி பரப்பிலான பணிமனை மற்றும் 12 ஷோரூம்களை கொண்டு இயங்கி வருகிறது. 2019–-20 மற்றும் 2020-–21ம் நிதியாண்டுகளில் முறையே 2 மற்றும் 3 ஷோரூம்களை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக 3 மற்றும் 4-ம் நிலை நகரங்களில் இந்த விரிவாக்கம் இருக்கும் என்றார் அவர்.
டி.வி. சுந்தரம் ஐயங்கார் சன்ஸ் நிறுவனத்தின் அங்கமான சுந்தரம் மோட்டார்ஸ் தொடர்ந்து வாகன விற்பனை, சர்வீஸ் துறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது என்று இணை நிர்வாக இயக்குனர் ராம் சந்தானம் தெரிவித்தார்.
ஹோண்டா கார்களில் ஹோண்டா சிட்டி விற்பனை 8.45% இடம் பிடித்தது. மீதமுள்ளவை ஜாஸ், அமேஸ் கார்களாகும். தென்னிந்தியாவில் முதல் டீலராக விளங்குகிறது. ஹோண்டாவைத் தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் கார் விற்பனை டீலராக நியமிக்கப்படவுள்ளது என்றார் சரத் விஜயராகவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *