செய்திகள்

டிவிஎஸ் மோட்டார்ஸ் பைக், ஆட்டோக்கள்: ஒரே மாதத்தில் 2.82 லட்சம் வாகனங்கள் விற்பனை

சென்னை, பிப். 4–

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜனவரி மாத வாகன விற்பனை 4% அதிகரித்துள்ளது என்று நிறுவனத்தின் இணைய நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் டிவிஎஸ் மோட்டார் மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 630 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2018 ஜனவரி மாத விற்பனையான 2 லட்சத்து 71 ஆயிரத்து 801 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகமாகும்.

இருசக்கர வாகன விற்பனை 2 லட்சத்து 62 ஆயிரத்து 992 என்ற எண்ணிக்கையிலிருந்து 2 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 69 ஆயிரத்து 277-ஆனது. உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 2 லட்சத்து 26 ஆயிரத்து 992-லிருந்து அதிகரித்து 2 லட்சத்து 28 ஆயிரத்து 654-ஆகியுள்ளது.

ஸ்கூட்டர்கள் விற்பனை 85 ஆயிரத்து 521 என்ற எண்ணிக்கையிலிருந்து சற்று குறைந்து 85 ஆயிரத்து 299-ஆனது. அதேசமயம், மோட்டார் சைக்கிள் விற்பனை 13 சதவீதம் வளர்ச்சி கண்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 253-ஆக இருந்தது. கடந்தாண்டு ஜனவரியில் இதன் விற்பனை 98 ஆயிரத்து 649-ஆக காணப்பட்டது.

தேவை சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து மூன்று சக்கர வாகன விற்பனை 8 ஆயிரத்து 806-லிருந்து 52 சதவீதம் ஏற்றம் கண்டு 13 ஆயிரத்து 353-ஆனது.

நடப்பு 2019 ஜனவரியில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 42 ஆயிரத்து 802-லிருந்து 23 சதவீதம் வளர்ச்சியடைந்து 52 ஆயிரத்து 650 வாகனங்களாக இருந்தது என டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணைய நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *