ஹூஸ்டன், மார்ச் 19-
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62), இன்று அதிகாலை இந்திட நேரப்படி 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
டிராகனில் இருந்து மீட்கப்பட்ட விண்வெளிவீரர்களுக்கு அடுத்தபணியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு வந்து சேர்ந்த விண்வெளி வீரர்கள் நால்வரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர் .