ஆர். முத்துக்குமார்
ஓஹியோ மாநில கவர்னர் முந்தைய நிறுவனரும் முதலீட்டாளருமான ஜே.டி. வான்ஸ் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டிரம்பின் முதன்மைக் குழு உறுப்பினராகவும் மகன் டொனால்ட் ஜூனியரின் நெருக்கமான நண்பரான வான்ஸ் பென்சில்வேனியாவில் பட்லரில் நடந்த கொலை முயற்சிக்குப் பின்னர், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இதில் பொறுப்பு இருப்பதாக வான்ஸ் கூறியதும் டிரம்பின் நம்பிக்கையை பரிபூரணமாக பெற்று இருப்பதில் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டது வியப்பில்லை.
மேலும் வான்ஸின் வெளிநாட்டு கொள்கைகள் – டிரம்பின் சிந்தனைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. வான்ஸின் உக்ரைனுக்கான அமெரிக்க உதவியைத் தொடர்ந்து விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்கா சீனாவை எதிர்க்க நிதி செலவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் எல்லைப் பிரச்சினைகள் முடிவடைய ரஷ்யாவிற்கு நிலத்தை திருப்பி தர வேண்டிய அவசியம் இருக்கலாம் என வான்ஸ் கூறியுள்ளார். மே மாதத்தில் கியுவின்சி பல்கலைக்கழகத்தில் பேசிய போது உக்ரைனில் நீடித்த போருக்கு நிதியளிப்பது அமெரிக்காவின் நலனுக்கு பாதுகமானது என மனம் திறந்து பேசியுள்ளார் .
தலைமையில் இளைஞர் 39 வயதான வான்ஸ் இளம்வாக்காளர்களை பிரச்சாரத்தில் ஈர்க்கும் விதத்தில் இருக்கிறார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக வயதான முக்கிய வேட்பாளர்களின் போட்டியில் இவரே இளம் கதாநாயகனாக விளங்குகிறார். பாரம்பரியமாக ‘ஸ்விங்’ சாதகமாக மாறும் மாநிலமாக உள்ள ஓஹியோவின் பிரதிநிதி வான்ஸ், 2020 இல் டிரம்ப் ஓஹியோவில் வென்றது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைத் தொழில்சாரா வாக்காளர்களை பென்சில்வேனியா, மிச்சிகன், மற்றும் விஸ்கான்சின் போன்ற எதிர்ப்பலை தென்படும் மாநிலங்களில் இவரது செல்வாக்கு தனக்கு சாதகமாக இருக்கும் என்று டிரம்ப் நம்பக் காரணம் உண்டு. இங்கு இவரது செல்வாக்கை ஈர்க்கும் திறன் வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்தலாம்.
இந்தியப் பெண் உஷா
மேலும் வான்ஸ்சின் மனைவி உஷா சிலுக்குரி இந்திய வம்சாவளி பெண். அமெரிக்காவின் தேசிய நிறுவனத்தில் வழக்குரைஞராக உள்ள அவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள்.
உஷா யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
யேல் சட்டப் பள்ளியில் சந்தித்த உஷாவும் ஜே.டி.வான்ஸும் 2014 இல் கென்டகியில் இந்து அர்ச்சகர் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். உஷா தனது கணவரின் தொழில் முயற்சிகளில் ஒரு முக்கிய பங்காளியாகவும் ஜே.டி.வான்ஸின் முன்னோக்குகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்பது, இந்தியர்கள் வாழும் பகுதியிலும் டிரம்புக்கு ஆதரவைப் பெற்றுத்தரும் .
அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள்
வான்ஸின் பொருளாதார மற்றும் குடியேற்றக் கொள்கைகள், டிரம்பின் கொள்கைகளைப் பிரதிபலிக்கின்றன.
“பிராட்-பேஸ்ட் டாரிஃப்ஸ்” வரி என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு விதிக்கும் வரிகள் ஆகும். டிரம்பின் திட்டம் அனைத்து வெளிநாட்டு இறக்குமதிகளுக்கும் 10% வரி, அந்த முன்மொழிவை ஆதரிக்கிறார் வான்ஸ். குடியேற்றம் தொடர்பாக தெற்கு எல்லைச் சுவரை முடிக்கவும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராகவும் வலியுறுத்துகிறார்.
மொத்தத்தில் ஜே.டி. வான்ஸின் தேர்வு, அவரது வாக்காளர் ஆதரவு, டிரம்பின் வெளிநாட்டு கொள்கை, பொருளாதார திட்டங்கள் மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் உடன்பாடு கொண்டுள்ள நிலையில் டிரம்பின் வருங்கால அரசியல் வாழ்வு மற்றும் பொருளாதாரக் காட்சிக்கு இவர் மிகபொருத்தமான தேர்வு என புரிகிறது.