தலையங்கம்
ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சி, “சரிநிகர்” என்ற கொள்கையை மையமாகக் கொண்டு புதிய வர்த்தக வியூகங்களை முன்னிறுத்த உள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு உயர்ந்த வரி விதிப்பது தொடர்பான reciprocal tariffs (பகிர்வுசார்ந்த சுங்க வரிகள்) விதிக்கும் திட்டம், உலக வர்த்தக பரிவர்த்தனைகளை மாற்றக்கூடி வல்லமை கொண்டு இருக்கிறது..
இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவுகளுக்கு பாதகமாக இருக்கப்போகும் முடிவுகள்
அமெரிக்க பொருட்களுக்கு உயர்ந்த சுங்க வரிகள் விதிக்கும் பழக்கம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் மீது டிரம்பின் இரண்டாம் ஆட்சி காலக்கட்டத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 100% அல்லது 200% வரி விதித்தால் அதே அளவுக்கு அமெரிக்காவும் விதிக்கத் இருப்பதை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையில் தற்காலிக வர்த்தக குளிர்ச்சியைப் பணிப்போரை உருவாக்கக்கூடும். ஆனால் நீண்ட காலத்தில் சமநிலையான வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது என்பதையும் மறந்து விடக் கூடாது.
அமெரிக்கா-இந்தியா உறவுகள், பைடன் நிர்வாகத்தின் கீழ் வலிமையாக வளர்ந்துள்ள நிலையில் அவரது கேபினட் சகா ஒருவர், “நாங்கள் இந்த உறவுகளை மிக வலிமையான நிலையிலே விட்டுச் செல்கிறோம்,” என வெளிப்படையாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார் . QUAD உச்சி மாநாடு போன்ற உயர்நிலை கூட்டங்களின் வழியே இரு தரப்புகளின் உறவுகள் வலுப்பெற்றுள்ளன.
டிரம்ப் குறிப்பிட்ட மற்றொரு நாடு பிரேசில் அவர்களுடன் வர்த்தக கொள்கைகளில் மாற்றத்துக்கு ஆளாகலாம். இந்த “reciprocity” கொள்கை உலகளாவிய அளவில் பல நாடுகளையும் புது சிக்கல்கள் கொண்ட பொருளாதார சூழ்நிலையில் நிறுத்தும். அமெரிக்காவின் வலிமையான வர்த்தக நிலைப்பாட்டை வலுப்படுத்தும். அவர்களின் அடிமைத்தன அரசியல் கொள்கைகளுக்கு வழி ஏற்படுத்தும்.
வணிகச் செயல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹாவர்ட் லூட்னிக், “உங்களால் எங்களை எப்படி நடத்துகிறீர்கள், அதே முறையில் உங்களை நாங்களும் நடத்துவோம் என எதிர்பார்க்கலாம்,” என்றார். இது வர்த்தகத்தில் சமத்துவம் என்ற கொள்கையை உறுதிசெய்கிறது என விளக்கம் தருகிறார்.
டிரம்பின் reciprocal tariff (பகிர்வுசார்ந்த வரி) கொள்கை, தைரியமான நடவடிக்கையாக அமையலாம். இது உலகளாவிய வர்த்தக உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதானாலும் நீண்டகால வேற்றுமைகளைச் சரிசெய்யும் நோக்கத்துடன் அமெரிக்காவின் வர்த்தக நிலையை உயர்த்தும் முயற்சியாக முன்வைப்பார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட முக்கியமான வர்த்தகக் கூட்டாளி நாடுகளுடன் டிரம்ப் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள், உருவாக இருக்கும் புது கொள்கையின் எல்லைகளையும் அதன் உள்விவகாரங்களின் தொல்லைகளையும் தெளிவாக புரிய வைக்கும்.