அறிவியல் அறிவோம்
“டிமென்ஷியா நோய் காரணமாக நினைவுப் பாதிப்புகள் 2050ஆம் ஆண்டு மும்மடங்காகும்”என்று விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறுகிய கால நினைவுகள் மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியிலும் நீண்டகால நினைவுகள் மூளையின் கோர்டெக்ஸ் பகுதியிலும் ஒரே நேரத்தில் சேமிக்கப்படுகின்றன என்று இதில் கிடைத்த முடிவுகள், சைன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அலப்போ நகர மூளை ஆய்வு மையத்தின் இயக்குநரான பேராசிரியர் சுசுமு டோனிகவா, “இது மாபெரும் ஆச்சரியம்” என்று தெரிவித்திருக்கிறார்.
“இந்த கருத்து பல தசாப்தங்களாக பிரபலமாக கருதப்பட்டு வந்ததற்கு மாறானது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
“முந்தைய கருத்தோடு ஒப்பிட்டால் இதுவொரு முக்கிய முன்னேற்றம். பெரியதொரு திருப்புமுனை”
நினைவுகள் உருவாகத் தொடங்கிய சில நாட்களில் நீண்டகால நினைவுக்கான கோர்டெக்ஸ் பகுதியை சோதனை எலி பயன்படுத்தியது போல தோன்றவில்லை.
மனநோயைத் தீர்க்க முயலும் மூளை ஆய்வுகள்
விஞ்ஞானிகள் ஹிப்போகேம்பஸ் பகுதியிலுள்ள குறுகிய கால நினைவுகளை நிறுத்தியபோது, அவற்றுக்கு வழங்கப்பட்ட மின் அதிர்ச்சியை எலிகள் மறந்துவிட்டன.
ஆனால், நீண்டகால நினைவு பகுதியை ஆய்வாளர்கள் தூண்டியபோது சோதனை எலிகளால் அந்த மின் அதிர்ச்சியை நினைவில் கொள்ள செய்ய முடிந்தது. எனவே அந்த நிகழ்வு அங்கேயே தான் இருப்பது உறுதியாகியது.
“அந்த நினைவு உருவான பல நாட்கள் வரை முதிரவில்லை அல்லது அமைதியாக இருக்கிறது” என்று பேராசிரியர் டோனிகவா தெரிவித்திருக்கிறார்.