கடலூர், பிப். 20–
கடலூர் மாவட்டத்தில் சாலையில் சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதியதில் 30 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி பலியானது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த சித்தூரில் வசித்து வருபவர் பரமக்குடியை சேர்ந்த முருகேசன். இவர் 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை இப்பகுதியில் வளர்த்து வருகின்றார்.
30 ஆடுகள் பலி
இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு சாலை வழியாக ஓட்டி சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஆடுகள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 30 க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் நசுங்கி பலியானது.
மேலும் 20 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார், லாரி ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.