1643 ஜனவரி 4 (ஜூலியன் நாட்காட்டி) அன்று பிறந்த சர் ஐசக் நியூட்டன், நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்த மாபெரும் விஞ்ஞானி. அவரது கண்டுபிடிப்புகள் இல்லையெனில் இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகமே உருவாகியிருக்காது என்றே கூறலாம்.
மனித அறிவு இயற்கையின் சட்டங்களை புரிந்து கொண்டு உலகை மாற்ற முடியும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் ஐசக் நியூட்டனின் முக்கிய கண்டுபிடிப்புகள், அவை:
இயக்க விதிகள் (Three Laws of Motion) – வாகனங்கள், இயந்திரங்கள், ராக்கெட்டுகள், விமானங்கள் அனைத்திற்கும் அடிப்படை.
ஈர்ப்புச் சட்டம் (Law of Universal Gravitation) – பூமி, சந்திரன், கோள்கள் இயக்கத்தை விளக்கியது; விண்வெளி அறிவியலின் தொடக்கம்.
கணிதக் கல்குலஸ் (Calculus – இணை கண்டுபிடிப்பு) – பொறியியல், இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் வரை எல்லாத் துறைகளுக்கும் அத்தியாவசியம்.
ஒளி ஆய்வு (Optics) – வெள்ளை ஒளி பல நிறங்களின் சேர்க்கை என்பதை நிரூபித்தார்; பிரதிபலிக்கும் தொலைநோக்கியை (Reflecting Telescope) உருவாக்கினார்.
சுருக்கமான காலவரிசை
1643 – பிறப்பு (இங்கிலாந்து).
1665–1667 – ‘அற்புத ஆண்டுகள்’; இயக்க விதிகள், ஈர்ப்பு கருத்துகள் உருவாக்கம்.
1687 – Principia Mathematica வெளியீடு; நவீன இயற்பியலின் அடித்தளம்.
1703 – ராயல் சொசைட்டியின் தலைவர்.
1705 – ‘சர்’ பட்டம் பெற்றார்.
1727 – மறைவு
டிஜிட்டல் யுகத்தில்…
இன்றைய செயற்கைக்கோள்கள், GPS, விண்வெளி பயணம், கணினி மாதிரிகள், பொறியியல் கட்டமைப்புகள், தொழிற்துறை இயந்திரங்கள்இவை அனைத்தும் நியூட்டன் வகுத்த விதிகளின் மேல் தான் இயங்குகின்றன. அறிவியலை கணிதச் சட்டங்களால் விளக்க முடியும் என்ற சிந்தனையை அவர் உறுதி செய்ததால், உலகம் அறிவியல் புரட்சி, தொழில்துறை புரட்சி, டிஜிட்டல் யுகம் என முன்னேறியது.
பிக்சல்கள், byteகள், அல்காரிதம் ஓடும் பாதையில், இயக்கம் சொல்லும் ஓர் மௌன மொழி நியூட்டனின் மூன்று விதிகளே!
![]()




