செய்திகள்

‘டிக் டாக்’ செயலிக்கு தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி, ஏப்.15–

‘டிக்டாக்’ செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாளை சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்து வழக்கு விசாரணைக்கு வர இருப்பதை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. மேலும் அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை டி.வி.க்களில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், டிக்-டாக் செயலி தடைக்கு எதிராக சீன நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டது. மேலும், வழக்கின் மறுவிசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்தோனேஷியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஏற்கனவே இந்த செயலியை தடை செய்துள்ளன. சைபர் குற்றங்களிலிருந்து சிறுவர் சிறுமிகளைத் தடுக்க ‘சில்ரன் ஆன்லைன் பிரைவேசி ஆக்ட்’ என்னும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *