செய்திகள்

டிஐஜி விஜயகுமார் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை, ஜூலை 7–

காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,” கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக திறம்பட பணியாற்றி வந்தவர் விஜயகுமார். அவர் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து துயருற்றேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகிய பணிகளில் துடிப்புடன் செயல்பட்ட விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *