செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை

சென்னை, ஜூன் 15–

டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களிலும் 35 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சில கடைகளில் பகலிலேயே அனைத்து மதுபானங்களும் விற்றுத் தீர்ந்து விட்டது.

நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. மொத்தம் 164 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.96 கோடி ரூபாய் அளவிற்கு மது பானம் விற்பனை நடைபெற்று உள்ளது.

மக்கள் தொகையில் மதுரையை விட அதிக மடங்கு கொண்ட சென்னை மண்டலத்தில் கூட 42.96 கோடி ரூபாய்க்குதான் மது விற்பனை நடைபெற்றது. எனவே, சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும் என ரூ.164.87 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *